நாடு முழுவதும் 27 நகரங்களில் 1000 கி.மீ க்கும் அதிகமான மெட்ரோ நெட்வொர்க்கில் பணிகள் நடந்து வருகின்றன : பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் ஆகிய திட்டங்களுக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்..குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘துரித மக்கள் போக்குவரத்து அமைப்பை’ இந்நகரங்களுக்கு இந்த மெட்ரோ திட்டங்கள் வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:நாடு முழுவதும் 27 நகரங்களில் 1000 கி.மீ க்கும் அதிகமான மெட்ரோ நெட்வொர்க்கில் பணிகள் நடந்து வருகின்றன. முந்தைய அரசிற்கும் தற்போதைய அரசிற்கும் வேறுபாடு என்னவென்றால் தற்போதைய அரசாங்கத்தில் நாடு முழுவதும் மெட்ரோ ரெயில் நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.இன்று உலகின் மிகப்பெரிய சிலை இந்தியாவில் உள்ளது. மிகப்பெரிய மலிவு வீட்டுவசதி திட்டம் இந்தியாவில் இயங்கி வருகிறது. மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டம் இந்தியாவில் இயங்குகிறது. 6 லட்சம் கிராமங்களை வேகமாக இணையத்துடன் இணைக்கும் பணியும் இந்தியாவில் நடந்து வருகிறது. 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா நிலவும் சோதனை காலத்திலும் தேசத்தின் வளர்ச்சிக்கான எங்களது அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.

அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் குறித்து:

28.25 கி.மீ நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் அமையும். மொட்டேரா விளையாட்டு அரங்கில் இருந்து மகாத்மா மந்திர் வரை 22.8 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படும். ஜி என் எல் யூ-வில் இருந்து கிஃப்ட் சிட்டி வரை 5.4 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ 5,384 கோடி ஆகும்

சூரத் மெட்ரோ ரயில் குறித்து

40.35 கி.மீ நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் சூரத் மெட்ரோ ரயில் திட்டம் அமையும். சர்தானாவில் இருந்து டிரீம் சிட்டி வரை 21.61 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படும். பேசனில் இருந்து சரோலி வரை 18.74 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ 12,020 கோடி ஆகும்

Related Stories: