சில்லி பாயின்ட்...

*  இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது. குசால் பெரெரா 62, குசால் மெண்டிஸ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். திரிமன்னே 76 ரன், எம்புல்டெனியா (0) களத்தில் உள்ளனர். முன்னதாக, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 135 ரன்னுக்கும், இங்கிலாந்து 421 ரன்னுக்கும் (கேப்டன் ஜோ ரூட் 228, லாரன்ஸ் 73, பேர்ஸ்டோ 47, பட்லர் 30 ஆட்டமிழந்தன.

* இந்திய அணி ஆல் ரவுண்டர்களும் சகோதரர்களுமான ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு (71) மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சக வீரர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

*  ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஜன. 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ள நிலையில், மினி ஏலம் பிப்.16ம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

*  ஒரே சுற்றுப்பயணத்தில் இத்தனை வீரர்கள் காயம் காரணமாக விலக நேரிட்டது குறித்து இந்திய அணி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று ஆஸி. அணி முன்னாள் நட்சத்திரம் கில்கிறிஸ்ட் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories:

>