கொரோனா தடுப்பூசியை நிச்சியமாக நான் போட்டுக் கொள்வேன்: கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்த இந்த நாளே நல்ல நாளாக கருதுகிறேன்: முதல்வர் பேட்டி

மதுரை: கொரோனா தடுப்பூசியை நிச்சியமாக நான் போட்டுக் கொள்வேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேசினார். இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சி வெற்றி பெற்றுள்ளது என கூறினார். முதலில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகவும் முதல்வர் விளக்கம் அளித்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசினார்.     பிரதமர் மோடியின் முயற்சியால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் தடப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம் என கூறினார்.

தமிழகத்தில் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர் ஒரு மருத்தவர் என கூறினார். உரிய பரிசோதனைக்கு பிறகே தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என கூறினார். அரசு அறிவித்த நடைமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் 226 இடங்களில் ஒத்திகை செய்து 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கூறினார். கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்த இந்த நாளே நல்ல நாளாக கருதப்படுகிறது என கூறினார்.

Related Stories: