எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கூட்டணிக்கே வாக்களிப்போம்: ஏ.எம்.விக்கிரமராஜா பேச்சு

சென்னை: கேளம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பஸ் நிலையத்தில் சமத்துவப்பொங்கல் விழா நடந்தது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, கூறியதாவது:  ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களின் நலனுக்காக கடைகளையும், மருந்து கடைகளையும் திறந்து வைத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு, தமிழக அரசு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.  தேர்தலை முன்னிட்டு வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினரின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டணிக்கே வாக்களிப்போம். வணிகர்களிடம் 17 சதவீத வாக்கு வங்கி உள்ளது என்றார்.

Related Stories:

>