தனுஷ்கோடி கடற்கரையில் ஆமைகள் முட்டையிடும் காலம் துவக்கம்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடற்கரையில் ஆமைகள் முட்டையிடும் காலம் துவங்கியது. நேற்று கடற்கரை மணலில் 135 ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டு குஞ்சு பொறிப்பகத்தில் வைத்தனர்.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் கடல் ஆமைகள் ஜனவரி மாதம் துவங்கி தனுஷ்கோடி உள்ளிட்ட மணல் சார்ந்த ஆள்அரவமற்ற கடற்கரை பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக இரவு நேரங்களில் வந்து செல்லும். தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தற்போது தார்ச்சாலை அமைக்கப்பட்டதற்கு பின்பு ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக இக்கடற்கரை பிரதேசத்திற்கு வருவது குறைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை தனுஷ்கோடி கடற்கரை மணலில் 135 ஆமை முட்டைகள் வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. கடற்கரை மணலில் நிலத்திற்குள் ஆமைகள் போட்டிருந்த முட்டைகளை, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் அமைந்துள்ள குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். கடந்த ஆண்டு ஜன. 18ம் தேதியன்று முதல்முறையாக ஆமை முட்டைகள் வனத்துறையினரால் சேகரிக்கும் பணி துவங்கியது. இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: