கயத்தாறில் சகதிகாடான சாலையால் திண்டாட்டம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து வடக்கு மயிலோடை, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை உள்ளிட்ட 10 மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும்  தொடர்மழையால் தெற்கு சுப்பிரமணியபுரத்திலுள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்கு அருகில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. சில தினங்களுக்கு முன்  இந்த சாலையை கடக்க முயன்ற கல் ஏற்றிவந்த லாரியின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து போக்குவரத்து தடைபட்டது.

சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்தியே சைக்கிள்களில் அருகிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அரசு கவனத்தில்கொண்டு இந்த சாலையினை விரைந்து சீரமைக்க வேண்டும்என சுற்றுவட்டார மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: