சவால்கள் நிறைந்த 16 ஆயிரம் கிலோ மீட்டர் வடதுருவ பாதையை விமானத்தில் கடந்து சாதனை படைக்கும் பெண் விமானிகள்: ஆண்களால் மட்டுமே முடியும் என்பது தவிடுபொடி

புதுடெல்லி: உலகின் மிக நீளமான விமான பாதைகளில் சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான பாதையும் ஒன்றாகும். இந்த பாதை 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமுடையது. மிகவும் சவால் நிறைந்ததும் கூட. இந்த பாதையை பனிப் படர்ந்த வடதுருவத்தின் வழியாகவே கடக்க வேண்டும். மேலும், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்படும் இந்த விமானம், இடையில் எந்த விமான நிலையத்திலும் நிற்காது. நேரடியாக பெங்களூரு வந்தே தரையிறங்கும். மிகவும் சவால் நிறைந்த இந்த பாதை வழியாக விமானத்தை இயக்குவதற்கு அதிக திறமை, அனுபவத்தோடு தொழில்நுட்பத்தை நன்கு கையாள தெரிந்த விமானிகளால் மட்டுமே முடியும்.

பொதுவாக, ஆண் விமானிகள் மட்டுமே இப்பாதை வழியாக விமானத்தை இயக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், வடதுருவத்தின் வழியாக கடக்க வேண்டிய இந்த பாதையில், முதன் முதலாக இந்திய பெண் விமானிகள் விமானத்தை இயக்கி சாதனை படைக்க உள்ளது. ஏர்-இந்தியா கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் குழு தனது பயணத்தை நேற்று தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30க்கு அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிகோவில் இருந்து இந்த விமானம் புறப்பட்டது. இது, நாளை அதிகாலை 3.30க்கு பெங்களூருவில் உ்ள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறது.

இதன் மூலம், ஆண்களால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை தவிடிப்பொடி ஆக்க உள்ளனர். இது குறித்து சோயா அகவர்வால் கூறுகையில், “அனுபவம் வாய்ந்த பெண் விமானிகள் தன்மாய் பாபாகரி, ஆகான் ஷா சோனவனே மற்றும் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் அடங்கிய பெண் விமானிகள் குழுவில் இடம் பெற்றது பெருமை அளிக்கிறது. பெண் விமானிகள் குழுவாக வடதுருவத்தை முதன் முதலாக கடந்து வரலாற்று சாதனை படைக்கிறோம்,” என்றார்.

2013ல் சாதித்த சோயா அகர்வால்

பெண் விமானிகள் குழுவில் இடம் பெற்ற சோயா அகர்வால், 2013ம் ஆண்டு போயிங் 777 விமானத்தை உலகின் முதல் பெண்ணாக இயக்கி சாதனை படைத்தார்.

Related Stories: