சட்டரீதியாகவும் சந்திக்க தயார்: அரசு நிலத்தில் நினைவுத்தூணை எப்படி அனுமதிக்க முடியும்: யாழ்ப்பாணம் பல்கலை. துணை வேந்தர் பேச்சு.!!!

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக   கொல்லப்பட்டதை நினைவுகூறும் வகையில் 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்   ‘முள்ளிவாய்க்கால் நினைவிடம்’ அமைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.   இந்நிலையில், நேற்றிரவு முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம்   மூலம் திடீரென இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இதனால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி  வருகிறது. இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவித்து, மாணவர்கள், தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இலங்கையில் இரவோடு இரவாக  முள்ளைவாய்க்கால் நினைவிடம் தரைமட்டமாக்கப்பட்டதற்கு பல்வேறு  கட்சி தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டது குறித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக   துணை வேந்தர் சற்குணராஜா கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை பல்கலைக்கழக  நிர்வாகமும், அரசும் இணைந்து அகற்றியது. அரசு நிலத்தில் நினைவுத்தூண் கட்டியதை எப்படி   அனுமதிக்க முடியும். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவத்தில் நினைவுத்தூண்  அகற்றப்பட்டதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சட்டரீதியாகவும் சந்திக்க தயார் என்றும்  தெரிவித்துள்ளார்.

Related Stories: