போக்குவரத்து நெருக்கடியால் நெல்லை தமு சாலையில் பாதசாரிகள் பரிதவிப்பு

நெல்லை: நெல்லை சந்திப்பு தமு சாலையில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாதசாரிகள் பரிதவித்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மேலும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய் பணியும் நடக்கிறது. இதேபோல் நெல்லை சந்திப்பு தமு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே சந்திப்பு ரயில் நிலையம் பகுதி என்பதாலும், மீனாட்சிபுரம் வழியாக டவுன் செல்லும் வாகனங்கள் தமு சாலையில் அதிகளவு பயணிப்பதாலும் தமு சாலையில் எப்போதும் போக்குவரத்து ெநருக்கடி இருக்கும்.

தற்போது தமு சாலையில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெறுவதால் சாலையின் இரு புறத்திலும் அதற்கான கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சாலையின் இருபுறத்திலும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன இதனால் தமு சாலையில் எதிர் எதிரே பயணிக்கும் வாகனங்களால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி முடிவடையும் வரையிலாவது அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்கள் பயணிக்கவும் தடை செய்தால் போக்குவரத்து நெருக்கடி குறைந்து பாதசாரிகள் நிம்மதியாக செல்ல வழிவகை ஏற்படும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: