விருதுநகர், தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் ₹85 கோடியில் பாலங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: விருதுநகர், தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் ₹85 கோடியில் கட்டப் பட்ட புதிய பாலங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் சேலம் மாவட்டம், திருச்செங்கோடு - அரியானூரில் ₹45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். மேலும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - அய்யனார்கோவில் வழி செண்பகத்தோப்பு சாலை, தென்றல் நகர், தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை - உடன்குடி சாலை மணிநகர், புதுக்கோட்டை மாவட்டம் செங்கமேடு - மணமடை - வெட்டிக்காடு சாலை, தேனி மாவட்டம் பூலாநந்தபுரம் - குச்சனூர் சாலை, பூலாநந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்டம் காந்திஜி சாலை கண்ணப்பன் நகர், பீளமேடு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையங்களுக்கு இடையே, சேலம் மாவட்டம் புழுதிக்குட்டை - சந்துமலை சாலை, புங்கமடு, சேலம் - உளுந்தூர்பேட்டை - அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே என மொத்தம் ₹85 கோடியே 73 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக \”Ready Reckoner for Highway Engineers” எனும் தொழில்நுட்ப கையேட்டை முதல்வர் வெளியிட்டார்.  மேலும், மயிலாடுதுறை தென்னாம்பட்டினம் கிராமத்தில், திருவாலி ஏரியின் திருநகரி வாய்க்கால் மற்றும் நாட்டுக்கண்ணி - மண்ணியாறு சங்கமத்தின் கீழே, தென்னாம்பட்டினம் மற்றும் பெருந்தோட்டம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் 9.76 கோடி மதிப்பீட்டில் கடல் நீர் உட்புகாவண்ணம் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி,்மதுரை திருமங்கலம் சாத்தங்குடி கிராமம் தெற்காற்றின் குறுக்கே, ₹2 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டிடும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி,மதுரை கவுண்டா நதியின் குறுக்கே, 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திரளி மற்றும் அதனை சுற்றியுள்ள 40 கிணறுகளுக்கு நீர் செறிவூட்டும் வகையில் தடுப்பணை அமைக்கும் பணி என மொத்தம் ₹24 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதார துறையின் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

Related Stories: