அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.   

அதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஆண்டிபட்டி, நத்தம், புலிபட்டி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவு. அதனைத்தொடர்ந்து நாகுடி, பர்லியார் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும் மீன்வர்களுக்கான எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: