திருப்பரங்குன்றம் அருகே ஹைமாஸ் விளக்கு சேதம்: நான்கு வழிச்சாலை சந்திப்பில் நாள்தோறும் விபத்துகள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழிச்சாலை சந்திப்பில் லாரி மோதியதில் ஹைமாஸ் விளக்கு சேதமடைந்தது. மீண்டும் அதை சரிசெய்யது நிறுவாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. மதுரை திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் கன்னியாகுமரி- பெங்களூரு நான்கு வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இச்சாலை சந்திப்பில் இருந்து மேற்கு பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள சாலை இணைப்பும் கிழக்கில் கப்பலூர் சிப்காட் மற்றும் கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையும் உள்ளது. இந்த சாலை சந்திப்பின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக டூவீலர்கள் அதிகளவில் சாலையை கடந்து செல்கின்றன.

மேலும் இப்பகுதியில் உள்ள சிப்காட்டில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இந்த சாலையை கடந்து தான் பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லாரி மோதியதில் இந்த சந்திப்பில் இருந்த ஹைமாஸ் விளக்கு சேதமடைந்தது. அதன்பிறகு இதுவரை சரிசெய்து நிறுவவில்லை.  இதனால் இரவுநேரங்களில் போதிய வெளிச்சமின்றி இப்பகுதியில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதி மக்கள் இந்த இடத்தில் மீண்டும் ஹைமாஸ் விளக்கு அமைக்க நெடுஞ்சாலை துறையில் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உடனடியாக இப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைத்து தர பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: