மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு..! டெல்லியில் காசிப்பூர்-நொய்டா வரை விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடன் நாளை விவசாயிகள் 8-ம் கட்ட பேர்ச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், தற்போது டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்வர் 26ஆம் தேதி டெல்லியை நோக்கி படையெடுத்தனர். காவல்துறையினரின் தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள், டெல்லியின் புராரி மைதானத்தில் முகாமிட்டனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ஒரு வருடம் ஆனாலும் இந்த போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள், தொடர்ந்து 42 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடும் குளிர் பனி மூட்டம் நிலவி வருகிறது. சாலைகளில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கிக் கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. ஏற்கனவே நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் நாளை விவசாய அமைப்பினருடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி 6ம் தேதி டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகையை  தொடங்கியுள்ளனர். முன்னதாக விவசாயிகள் டிராக்டர் பேரணியை டெல்லி பால்வால் வரை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்ததினார். ஆனால் இப்போது அவர்கள் நொய்டா வரை மட்டுமே சென்று காசிப்பூர் திரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதுமான போலீஸ் படை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் டெல்லிக்கு அருகிலுள்ள காசிப்பூர் எல்லையில் டிராக்டர் பேரணியை நடத்துகின்றனர்.

Related Stories: