வீட்டுமனைப்பட்டா வழங்காததை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகாவிற்குட்பட்ட அதிகத்தூர், பிஞ்சிவாக்கம், கடம்பத்தூர் ஆற்றங்கரை ஓரம், ஏகாட்டூர் ஆகிய ஊராட்சிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் இன மக்கள் பட்டா வழங்கக் கோரி பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2.11.2020 அன்று நடைபெற்ற பேச்சு வார்ததையின் போது 15 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் இதுவரை  பட்டா வழங்காததைக் கண்டித்து பட்டா வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருளர் மக்கள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலத் தலைவருமான டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் மக்கள் கலந்து கொண்டு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி முழக்கமிட்டனர். திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: