தொடர் மழையால் சிவகங்கை மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு.: சாய்ந்த நெற்பயிர்களை கயிறு கட்டி காப்பாற்றும் விவசாயிகள்

சிவகங்கை: புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த விவசாயிகள் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 600 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிவர், புரெவி என அடுத்தடுத்த புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு வந்த நிலையில் தற்போது ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் வீணாகிவருகிறது.

இதனால் நெல்மணிகளை காப்பாற்ற விவசாயிகள் வயலில் கயிறு கட்டி பயிர்களை காயவைத்து வருகின்றனர். இதேபோல கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்த நெல்லும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மழையால் அறுவடை செய்த நெல் வீணாவதை தடுக்க மின் உலர்த்திகளை அரசே பயன்பாட்டுக்கு கொண்டு வர  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: