எந்த நொடியிலும் போர் தொடுக்க தயாராக இருங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவு

பீஜிங்: இந்தியா-சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. இருநாடுகள் ராணுவத்தை குவித்துள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இரு தரப்பும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை. சில தினங்களுக்கு முன் லடாக் பகுதியில் சீனா 35 பீரங்கிகளை நிறுத்தியது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவும் தனது ராணுவத்தை தயார்நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது. இ்ந்நிலையில், எந்த நொடியும் முழு அளவிலான போருக்கு தயாராகும்படி தனது நாட்டு ராணுவத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்தியா-சீனா இடையே போர் மூளும் அபாயம் அதிகமாகி உள்ளது. இது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: