அரசு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு: அம்மா இல்லாத பிள்ளையாக அனாதையாக உள்ளோம்

மதுரை: அம்மா இல்லாத பிள்ளையாக அனாதையாக நாங்கள் உள்ளோம் என்று அரசு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ அரசியல் பேசியது அதிகாரிகளை நெளியச் செய்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதார்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மதுரை மாவட்டத்தில் இதற்கான துவக்க விழா ஜெய்ஹிந்த்புரத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பொங்கல் தொகுப்பை வழங்கி பேசுகையில், ‘‘திருவிளையாடல் புராணத்தில் மன்னரின் சந்தேகம் தீர்க்க, சிவன், தருமிக்கு பாடல் எழுதி கொடுப்பார். அதில் உள்ள குறையை நக்கீரன் கண்டுபிடித்துக் கூறுவார். அதுபோல், எதிர்க்கட்சிகள் குற்றம் கண்டுபிடித்து கூறிக்கொண்டே உள்ளனர். அம்மா இல்லாத பிள்ளையாக அனாதையாக உள்ளோம். தாயில்லா பிள்ளையை ஆதரியுங்கள்’’ என்றார்.

Related Stories: