டெல்லி விமான நிலையத்தில் ரூ4 கோடி ‘ஹெராயின் கேப்சூல்’ பறிமுதல்

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்றிரவு பயணிகள் வருகை நுழைவு வாயிலில் திடீர் ேசாதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்குரிய ஒரு நபரை பிடித்து தீவிரமாக பரிசோதித்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அவரது வயிற்றில் பிளாஸ்டிக் மாத்திரைகள் இருந்தன. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்த நபருக்கு பேதி வரவழைத்து அந்த பிளாஸ்டிக் மாத்திரைகளை பரிசோதித்தனர். ஆப்கானிய நபரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட 89 பிளாஸ்டிக் காப்ஸ்யூல்களில் இருந்து சுமார் 635 கிராம் போதை பொருள் தூள் கிடைத்தது.

இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காப்ஸ்யூலில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளை பரிசோதனை செய்த போது, ​அது​வெள்ளை நிற ஹெராயின் போதை ெபாருள் என்பது உறுதிசெய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த ஹெராயின் விலை ரூ.40 மில்லியன் (இந்திய ரூபாயில் 4 கோடி). குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிய நபரின் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்து ஹெராயின் கேப்சூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி ரயில்வே காவல்துறை ைநஜீரியா நாட்டு நபரையும், ஒரு பெண்ணையும் போதை பொருள் வழக்கில் கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து ரூ .10 கோடி மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: