போக்குவரத்து பணிமனை அருகே கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவு: தொற்று நோய் பரவும் அபாயம்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் இருந்து சென்னை, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த போக்குவரத்து கழக பணிமனையின் அருகில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சீட் கவர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மக்க கூடிய தன்மை இல்லாததால் அதிக அளவு கிடக்கிறது. இதனால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக இருப்பதுடன், அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாகி தொழிலாளர்களுக்கு வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தையும் முற்றிலும் அகற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: