முதியோர்களிடம் மோசடிசெய்த நிறுவனத்துக்கு தடை

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மைக்கேல் பிரையன் காட்டர் என்பவர் சிங்கப்பூர், நெவடா, நியூயார்க் உள்பட 4 நகரங்களில் டெலி மார்க்கெட்டிங், இணைய தளம் மூலம் சாப்ட்வேர் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களை நடத்தி வந்தார். இவரது நிறுவனங்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை, அமெரிக்காவில் வசிக்கும் முதியோர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் பாப்-அப் செய்தி போன்று, வைரஸ் பிரச்னை இருப்பதாக தோற்றுவித்து, ஒரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படும்.  அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், இந்தியாவில் உள்ள கால் சென்டர் மூலம், வைரஸ் பிரச்னை இருப்பதாகவும் அந்த தொழில்நுட்ப கோளாறினை சரி செய்ய சில நூறு டாலர்கள் செலவாகும் என்று கூறி, அவர்களின் சேமிப்பு பணத்தை சுரண்டி மோசடி செய்து வந்தது.  இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்ற அட்டார்னி ஜெனரல் ஜெப்ரி பொசர்ட் கிளார்க், அமெரிக்க முதியோர்களிடம் மோசடி செய்த  காட்டரின் 4 நிறுவனங்களையும் நிரந்தரமாக மூடும்படி உத்தரவிட்டார்.

Related Stories: