போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கோவையில் திமுகவினர் முற்றுகை எம்எல்ஏ உள்பட 2,000 பேர் கைது

கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகரில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். ஆனாலும், தடையை மீறி தி.மு.க.வினர் அந்தந்த பகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை கூட்டுகின்றனர். இதையடுத்து, போலீசார் தி.மு.க.வினரை கைது செய்து வருகின்றனர். இதை கண்டித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று மாலை நடந்தது. மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், போலீஸ் அராஜகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: