காதல் தோல்வி, வேலையின்மை, குடும்ப பிரச்னை; கோவையில் நடப்பாண்டில் 827 பேர் தற்கொலை: ‘பெண்களை விட ஆண்கள் அதிகம்’

கோவை: கோவை மாநகரில் நடப்பாண்டில் 827 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்னை, மதுப்பழக்கம், காதல் தோல்வி, வேலையின்மை, வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமை, மன ரீதியான பிரச்னைகள் போன்றவற்றால் தற்கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் நடப்பாண்டில் இது வரை 827 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் ஆண்கள். இவர்களில் மதுப்பழக்கத்தால் தற்கொலை செய்து உயிரை மாய்த்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் 30 வயது 40 வயதுக்குட்பட்டவர்கள். கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 847 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளவேண்டும். பணிச்சுமை, குடும்ப சூழ்நிலை காரணமாக உளவியல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு தற்கொலை எண்ணங்கள் துளிர் விட்டால் அவர்கள் உடனே மனநல நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என மனநல மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: