சீரழிவிலிருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் உருமாறிய கொரோனா இந்தியாவை தாக்குமா?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. எனினும் ஊரடங்கு மற்றும் கொரோனா கண்டறியும் முகாம் மூலம் தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சீரழிந்திருந்த பொருளாதாரம் மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. கொரோனாவுக்கு பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை பயன்படுத்த முதன்முதலாக இங்கிலாந்து நாடு அனுமதி அளித்தது. இதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்று உலக மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்தில் கொரோனா உருமாற்றம் பெற்று அதிக வீரியத்துடன் அதாவது ஆரம்பத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் வேகத்தை விட 70 மடங்கு வேகமாக பரவுவதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இங்கிலாந்திலிருந்து இந்தியா வரக்கூடிய அனைத்து விமானங்களும் தடை செய்யப்பட்டன. எனினும் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 10 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதியாகியுள்ளது. அது வீரிய வகைதானா என்று கண்டறிய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறியாக முன்பு சொல்லப்பட்ட வறட்டு இருமல், வாசனை திறன் இழப்பு, சுவை திறன் இழப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாது, இந்த புதிய வீரிய வகை கொரோனாவுக்கு மேலும் 7 அறிகுறிகள் தென்படும் என கூறப்பட்டுள்ளது. மிகுந்த சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி போன்றவை இதற்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது. புதுப் பிரச்னையாக உருவெடுத்துள்ள உருமாறிய கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள் என வந்து பொருளாதாரம் மறுபடி சரிய ஆரம்பித்துவிடுமோ என பலரும் அச்சப்பட தொடங்கியுள்ளனர். புதிய வைரஸின் தாக்கமும் வீரியமும் குறித்து இப் பகுதியில் அலசப்படுகிறது.

Related Stories: