சென்னையில் சைக்கிள், நடைபாதை அமைக்க 24 கி.மீ சாலைகள் மறுவடிவமைப்பு

சென்னை: சென்னையில் முதல் கட்டமாக 24 கி.மீ சாலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளது. இதில் சைக்கிள், நடைபாதை அமைப்பதற்கு முக்கியதுவம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டுவருகிறது. குறிப்பாக தி.நகரில் பொதுமக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சைக்கிள் பாதை அமைக்கவும் முக்கியதுவம் அளிக்கப்படவுள்ளது. இதன் இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து கொள்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி சென்னையில் உள்ள 111 கிலோ மீட்டர் நீள சாலைகளை மறுவடிமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

மேலும் இது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பாக ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மேகநாத ரெட்டி, தலைமை பொறியாளர் நந்தக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முதல் கட்டமாக 24 கி.லோ மீட்டர் சாலைகள் மறுவடிமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அண்ணா நகர் 3வது அவின்யூ. திருவெற்றியூர் நெடுஞ்சாலை, ஜிஏ சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, எஸ்டாம்ஸ் சாலை, சி.பி.ராமசாமி சாலை, ரேஸ் கோஸ் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, காந்தி மண்டபம் சாலை உள்ளிட்ட இடங்கள் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: