நாட்டில் பெரும்பாலான கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன. ஆனால் பாஜகவினருக்கு கட்சி தான் குடும்பம் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், புதிய இந்தியா செய்திகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு என்ற புத்தகங்களை வெளியிட்டார். இதையடுத்து பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பீகாரில் 3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஐதராபாத், மத்திய பிரதேசம், அருணாசலபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் கணிசமான இடங்களில் பா.ஜ.க. வெற்றியை பெற்றுள்ளது. தனது ஆட்சி முறையால் காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலங்களாக இழந்து வருகிறது. வெற்றிகளை குவித்து பா.ஜ.க. எழுச்சியை அடைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வரக்கூடிய சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க., தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும். நாட்டில் பெரும்பாலான கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன. ஆனால் பா.ஜ.க.வினருக்கு கட்சி தான் குடும்பம். இதுதான் மற்ற கட்சிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள வித்தியாசம். கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுகிறது,என்றார்.தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக நிருபர்கள் இந்த கேள்வியை கேட்டபோதும் அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Stories: