பாப்புலர் பிரன்ட் அமைப்புக்கு 3 மாதங்களில் குவிந்த 100 கோடி: நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தகவல்

திருவனந்தபுரம்: பாப்புலர் பிரன்ட்  அமைப்பிற்கு கடந்த 3 மாதத்தில் 100 கோடிக்கு மேல் பணம் வந்துள்ளது என்று  அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரகூப். இவர், பாப்புலர் பிரன்ட் அமைப்பின் மாணவர் அமைப்பான, ‘கேம்பஸ் பிரன்ட்’டின் தேசிய செயலாளராக உள்ளார். இவரது 3 வங்கி கணக்குகளுக்கு பெருமளவு பணம் அனுப்பப்பட்டதால், அமலாக்கத் துறை கண்காணித்தது.  சில நாட்களுக்கு முன் இவர் வெளிநாடு தப்பி செல்ல முயன்றபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை அமலாக்கத்துறை ைகது செய்து விசாரித்தது. விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வங்கி கணக்குகளில் 100 ேகாடிக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணம் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ேபாராடியவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இவருக்கு இந்த பணத்தை அனுப்பியது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: