சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகை இன்று இந்தியா வழிநடத்துகிறது: விஸ்வபாரதி பல்கலை.நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு.!!!

டெல்லி: விஸ்வபாரதியிலிருந்து வெளிவரும் செய்தியை நம் நாடு உலகம் முழுவதும் பரப்புகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விஸ்வபாரதியி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இன்று நூற்றாண்டை கொண்டாடுவது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். விஸ்வபாரதியிலிருந்து வெளிவரும் செய்தியை நம் நாடு உலகம் முழுவதும் பரப்புகிறது.

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனை, தொலைநோக்கு, மற்றும் கடின உழைப்பின் உண்மையான உருவகமாக விஸ்வபாரதி பல்கலைக்கழகம் உள்ளது. இது இந்தியாவுக்கு ஒருவிதமான போற்றத்தக்க இடம். குருதேவ் கண்ட கனவை நனவாக்க, இது நாட்டுக்கு தொடர்ச்சியான ஆற்றலை அளிக்கிறது. சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி மூலமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகை இன்று இந்தியா வழிநடத்துகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்குகளை அடைய சரியான பாதையில் செல்லும் ஒரே பெரிய நாடு இந்தியா.

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி பேசும்போது, 19-20 ஆம் நூற்றாண்டின் யோசனைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இதற்கு அடித்தளம் நீண்ட காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டது என்பது உண்மை. பல நூற்றாண்டுகளாக பல்வேறு இயக்கங்களிலிருந்துதான்,சுதந்திர இயக்கம் ஆற்றலை பெற்றது. இந்தியாவின் ஆன்மீக, கலாச்சார ஒற்றுமையை பக்தி இயக்கம் வலுவடையச் செய்தது. பக்தி யுகத்தில் முனிவர்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், திசைகளிலும் மக்களின் உணர்வைத் தட்டி எழுப்ப செய்தனர்.

பலவித போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருந்த  இந்தியாவில் பக்தி இயக்கம் ஒன்றிணைந்த உணர்வு நிலையையும், தன்னம்பிக்கையையும் பல நூற்றாண்டுகள் நீடிக்கச் செய்தது. பக்தி இயக்கம் பற்றி நாம் பேசும்போது திரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி குறிப்பிடாமல் முழுமை பெறாது. இந்த தலைசிறந்த மகானால் தான் நமக்கு சுவாமி விவேகானந்தர் கிடைத்தார். சுவாமி விவேகானந்தரின் பக்தி, அறிவாற்றல் மற்றும் செயல்திறன் அனைத்தும் ஒன்றாகக் கலந்திருந்தன.

பல நூற்றாண்டுகளாக நீடித்த ஏராளமான இயக்கங்கள் தியாகம்,தவம் மற்றும்  தர்ப்பணத்திற்கு தனித்துவமான உதாரணங்களாக விளங்கின. இந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திர போராட்டத்தில் தங்களது உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories: