வெற்றியை தொடருமா இந்தியா: 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு

கெபேஹா: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது.

இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கெபேஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.  வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ள இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் சூப்பர் பார்மில் உள்ளார். கேப்டன் சூர்யகுமார், அபிஷேக் நாயர், திலக் வர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்டியா என அதிரடி வரிசை நீள்கிறது. பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. மறுபுறம் தென்ஆப்ரிக்கா முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களம் இறங்கும்.

பவுலிங்கில் சில மாற்றம் இருக்கும் என தெரிகிறது. இரு அணிகளும் டி.20 போட்டியில் 29வது முறையாக மோத உள்ளன. இதற்கு முன் ஆடிய 28 போட்டியில் 16ல் இந்தியா, 11ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.கெபேஹாவில் ஒரே ஒரு டி.20 போட்டியில் கடந்த ஆண்டில் ஆடி உள்ள இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்ரிக்கா இங்கு 4 போட்டியில் 3ல் வென்றுள்ளது.

The post வெற்றியை தொடருமா இந்தியா: 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: