சிக்கமகளூருவில் வரும் 25ம் தேதி வளர்ச்சி பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

சிக்கமகளூரு: சிக்கமகளூரு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட செல்லவுள்ள முதல்வர் எடியூரப்பா பேலூர் செல்லும் 4 வழி சாலையை திறந்து வைக்க இருப்பதாக மாவட்ட செய்தி தொடர்பாளர் வரசித்தி வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட செய்தி தொடர்பாளர் வரசித்தி வேணுகோபால் கூறும்போது, சிக்கமகளூரு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.  இதில் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 412 கோடி மதிப்பிலான மருத்துவ கல்லூரி, வாஜ்பாய் குடியிருப்பு பகுதி மற்றும் 102 கோடியில் அமிர்த்த கங்கா குடிநீர் திட்டம், 20 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான பணிகள் தொடங்க இருக்கிறது.

மேலும் சிக்கமகளூருவில் இருந்து பேலூரை நோக்கி 10 கி.மீ தூரம் வரை அமைக்கப்பட்டுள்ள 4 வழிசாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடியூரப்பா திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் சிக்கமகளூரு எம்.எல்.ஏ சி.டி ரவி, கட்சி உறுப்பினர்கள், பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: