2019ல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கையேட்டை இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா வெளியிட்டார். 2019ல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவி பேட் தொடர்பான கையேடு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைய கூறினார். 18 வயதான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன் வர வேண்டும் என வலியுறுத்தினார். கொரோனா தொற்று காலத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவது சவாலானது என எடுத்துரைத்தார். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை என கூறினார்.

கொரோனா காலகட்டத்தில் பீகார் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என குறிப்பிட்டார். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும் என கூறினார். தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என கூறினார்.

உடல்நலக்குறைவு இருப்போருக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார். 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறினார். ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கூறினார்.

Related Stories: