சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எடப்பாடி, ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: சட்டதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர் கொள்வது குறித்து அதிமுக தலைவர்கள பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் திடீரென எடப்பாடி தொகுதியில் தொடங்கினார். தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக மக்களிடையே கொண்டு செல்ல மாநில, மாவட்ட நிர்வாகிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டன. மேலும், பொதுக்குழுவை  தள்ளி வைப்பது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் மார்ச் வரை நேரம் கேட்டுள்ளதால், அதற்குள் பொதுக்குழுவை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், எப்போது நடத்தலாம் என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் கூட்டணி குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் சீட்கள் குறித்தும் முடிவு செய்யப்படும் என்பதால் பொதுக்குழு ஜனவரியில் நடக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென பிரசாரம் தொடங்கி உள்ளதால், மூத்த தலைவர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக பேசப்பட்டன. மேலும், அதிமுகவில் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்திற்கு அழைப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மேலும், கூட்டணி கட்சிகள் சீட் கேட்டு நெருக்கடி தரும் நிலையில், அவர்களை சேர்த்து இப்போதே பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: