அணைகள் நிரம்பியதால் உபரிநீர் திறப்பு: தாமிரபரணியில் கரைபுரண்டோடும் வெள்ளம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் அமைந்துள்ளன.  இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக பாபநாசம் அணை நேற்று முன்தினம் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல், சேர்வலாறு, கடனா, ராமநதி ஆகிய அணைகளும் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து லேசான மலையும் பெய்து வருவதால் காட்டாற்று வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லையில் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை தொட்டுக் கொண்டு வெள்ளநீர் செல்கிறது. இதையடுத்து நெல்லை கலெக்டர் விஷ்ணு கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: