வேளாண் சட்டம் கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: விவசாயம் மாநில  பட்டியலில் தான் இன்றைக்கும் உள்ளது. மாநில பட்டியலில் இருக்கிற பொருள்   மீது எப்படி 3 சட்டங்களை கொண்டு வந்தீர்கள், 3 சட்டங்கள் குறித்து 78 ஐஏஎஸ்  அதிகாரிகள் கூறுகையில், இந்த சட்டத்தை நாங்கள் அலசி ஆராய்ந்து பார்த்தோம்.  அந்த சட்டத்தில் கூட்டாட்சி தத்துவத்தையே குழிதோண்டி புதைக்கும்  வகையில்,  அந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.  ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடியை ரத்து செய்த கலைஞரை போன்று,  ஒழுங்கு முறை விற்பனை கூடம், உழவர் சந்தையை அமைத்த கலைஞரை  போன்று உழவர்களை  மு.க.ஸ்டாலின் காப்பார்.

Related Stories: