மாநிலத்தில் கொரோனா 2வது அலை பரவாமல் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் சுதாகர் ஆலோசனை

சிக்கபள்ளாபுரா: மாநிலத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வரும் 2021-22ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களிடம் நுழைவு கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்தில் அரசு மேற்ெகாண்டுவரும் முயற்சி காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. சர்வதேச மருத்துவ  ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மாநிலத்தில் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் தற்போது பின்பற்றி வரும் கோவிட்-19 விதிமுறையை தொடர வேண்டும். பெங்களூருவில் இயங்கிவரும் மருத்துவ அறிவியல் கழகத்தில் கடந்த 2006ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த விரிவுரையாளர்கள் உள்பட அலுவலக ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் வழங்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது.

மேலும் சில அரசு மருத்துவமனைகளில் 7 முதல் 8 ஆயிரம் சம்பளத்திற்கு பலர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் தங்களுக்கு பணி ஓய்வுக்கு பின் பென்ஷன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலனை செய்து செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. மேலும் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் வசூலிக்கும் நுழைவு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வரும் 2021-22ம் கல்வியாண்டு முதல் கட்டணம் உயர்த்தப்படும். மேலும் தற்போது ஒரு கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இது 250 ஆக உயர்த்தப்படும். மேலும் கல்லூரிகளின் வருமானத்தை உயர்த்த வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

Related Stories: