விவசாயிகளின் போராட்டம் எதிரொலி நொய்டா-டெல்லி சாலை மூடல்:டெல்லி போலீசார் நடவடிக்கை

நொய்டா: சில்லா எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, டெல்லி-நொய்டா இணைப்பு சாலையின் ஒரு பக்கம் பயணிகள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இங்கு விவசாயிகளின் எதிர்ப்பு தொடங்கிய டிசம்பர் 1 முதல் சில்லா எல்லை மூடப்பட்டு இருந்தது. அதன்பின்னர் டிசம்பர் 12 ஆம் தேதி வரை சாலையின் ஒரு பக்கம் (நொய்டா முதல் டெல்லி) மூடப்பட்டிருந்ததை போராட்டக்காரர்கள் பயணிகளுக்காக  திறக்க ஒப்புக் கொண்டனர்.

எனினும், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே தொடர்ந்து தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். விவசாய சங்கங்கள் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மீண்டும் மூடப்பட்டது.

இதுபற்றி நொய்டா போக்குவரத்து போலீசார் தெரிவித்ததாவது: விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, சில்லா எல்லையில் நிலவும் தற்போதைய சூழல் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. குறிப்பாக, தலித் பிரேர்ணா ஸ்டாலில் இருந்து டெல்லி-நொய்டா-டைரக்ட் (டி.என்.டி) சாலைக்கு  போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. காலை 11 மணியளவில் இந்த பாதை மூடப்பட்டு, டிஎன்டி மற்றும் கலிண்டி கஞ்ச் சாலைகள்  பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

Related Stories: