மத்திய அமைச்சரவை ஒப்புதல்: சர்க்கரை ஏற்றுமதிக்கு 3,500 கோடி மானியம்

புதுடெல்லி: நாட்டில் தற்போது, 5 கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர்.  மேலும், 5 லட்சம் தொழிலாளர்கள் சர்க்கரை ஆலைகளிலும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். கரும்புகளை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் விற்கின்றனர். ஆனால், சர்க்கரை ஆலைகளில் கூடுதல் இருப்பு உள்ளதால், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் நிலுவையில் வைக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதல் சர்க்கரை இருப்பை அகற்ற மத்திய அரசு உதவி வருகிறது. அந்த வகையில், 2020-21 நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ₹3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மானிய பணத்தை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்ய  அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.  இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘தற்போது, சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்’’ என்றா

Related Stories: