பிராய்லர் கோழி கடைகள் டிச.19, 20ம் தேதி அடைப்பு?

மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கோவை, பல்லடம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பிராய்லர் கோழிகள் வேன்கள் மூலம் விற்பனைக்கு வருகின்றன. பண்ணையில் கோழிகளை வளர்க்க பெரிய நிறுவனங்கள் கூலி கொடுத்து வருகின்றன. உற்பத்தி செய்யப்படும் பிராய்லர் கோழிகள், சென்றடையும் இடத்தை கவனத்தில் கொண்டு, 24 மணி நேரத்திற்கு தீவனம் கொடுக்காமல் ஏற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால், சமீபகாலமாக பிராய்லர் கோழிக்கு, பண்ணையில் இருந்து ஏற்றும் போது ஒரு கிலோ எடையுள்ள கோழிக்கு 100 கிராம் வரை தீவனம் வைத்து ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கோழியின் எடை கூடி, அதற்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.  இதுதொடர்பாக கோழி வியாபாரிகள் சங்கத்தினர், அரசிடம் எடுத்துக்கூறியும் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.இதனால்,  வரும் 19, 20ம் தேதி தமிழகம் முழுவதும் ேகாழிக்கறி கடைகளை அடைக்க அவசரக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கான மாநில அளவிலான கூட்டம், திருச்சியில் 18ம் தேதி நடக்கிறது’’ என்றார்.

Related Stories: