நீலகிரியில் மாவோயிஸ்ட் நடமாட்டமா? அதிரடிப்படை டிஐஜி பேட்டி

ஊட்டி: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கேரளா, கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது. நீலகிரியை ஒட்டியுள்ள கேரளாவின் வயநாடு மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. எல்லையோர பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு அவ்வப்போது வரக்கூடிய அவர்கள், அரசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி செல்வார்கள். நீலகிரி மாவட்டம், வயநாட்ைட ஒட்டி அமைந்துள்ளதால், நீலகிரிக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து விடாதபடி நீலகிரி எல்லையோர கிராம பகுதிகள், வனப்பகுதிகளில் தமிழக அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டி வந்த  தமிழக அதிரடி படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு டிஐஜி நரேந்திரன் நாயர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இல்லை. மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. கேரள மாநில எல்லையோர பகுதிகளில் அமைந்துள்ள கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் முகாம் அமைத்து வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

Related Stories: