எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை வசதி இன்று தொடங்கியது: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

மும்பை: ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனையை 24 மணி நேரமும் 7 நாட்களும் மேற்கொள்ளும் வசதி இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இதை அறிவித்துள்ளார்.  வங்கிகளில் அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைக்கு ஆர்டிஜிஎஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வங்கி வேலை நாட்களில் குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே இந்த பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை சமர்ப்பித்த ரிசர்வ் வங்கி, ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனையை வங்கி வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் 7 நாட்களும் மேற்கொள்ளும் வசதி செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்திருந்தது.  இதற்கேற்ப இந்த வசதி இன்று அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே 365 நாட்களும் 24 மணி நேரமும் 7 நாட்களும் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை வசதியை வழங்குகின்றன.

இது நாளை அதிகாலை 12.30 மணிக்கு செயல்பாட்டுக்கு வருகிறது’’ என தெரிவித்துள்ளார். என்இஎப்டி முறையில் 2 லட்சம் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும்.  ஆர்டிஜிஎஸ் முறையில் அதிக மதிப்பிலான உடனடி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஆர்டிஜிஎஸ் முறை கடந்த 2004 மார்ச் 26ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. தற்போது இந்த முறையில் நாள் ஒன்றுக்கு சுமார் 4.17 லட்சம் கோடி மதிப்பிலான 6.35 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பரில் சராசரி ஆர்ஜிடிஜிஎஸ் பரிவர்த்தனை மதிப்பு 57.96 லட்சமாக உளள்து.

Related Stories: