கொச்சி சாலையில் இழுத்து செல்லப்பட்டு காயமடைந்த நாய்க்கு புதிய பெயர் ‘அபாக்கா’ விலங்குகள் நல அமைப்பு நிர்வாகி தத்தெடுத்தார்

திருவனந்தபுரம்: கொச்சி அருகே டிரைவர் ஒருவர் நாயை காரில் கட்டி அரை கி.மீட்டர் தொலைவுக்கு இழுத்து சென்றார். இதை பார்த்த காரின் பின்னால், பைக்கில் சென்று கொண்டிருந்த நெடும்பாசேரி ேமய்க்காடு கரிம்பாட்டூர் பகுதியை சேர்ந்த அகில் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து ேபாலீசார் விசாரித்தபோது, அவர் கொச்சி அருகே குன்னுக்கா சாலாக்காவை சேர்ந்த டிரைவர் யூசுப் (62) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காரில் வந்த ஒரு கும்பல் யூசுப் வீட்டில் கல்லெறிந்து விட்டு தப்பி சென்றது. இதில் அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கிது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே காயமடைந்த அந்த நாய் பரவூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சாலையில் இழுத்து செல்லப்பட்ட அந்த நாய், தற்ேபாது ‘அபாக்கா’ என்று செல்லப்பெயர் பெற்றுள்ளது. அதற்கு காயங்கள் காணப்பட்ட போதிலும் நன்றாக இருக்கிறது. ‘தயா’ என்ற விலங்குகள் நல அமைப்பின் துணைத்தலைவர் கிருஷ்ணன் என்பவர் அந்த நாய்க்கு ‘அபாக்கா’ என பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.

கைவிடப்பட்ட 12 நாய்களை கிருஷ்ணன் தனது வீட்டில் வளர்த்து வருகிறார். டியூஷன் ஆசிரியரான கிருஷ்ணன் தனது வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை நாய்களுக்கு உணவு வழங்க செலவழித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: