தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 64வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய  விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு காஞ்சி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஊக்கத்தொகை வழங்கினார். 64வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய  விளையாட்டுப் போட்டிகளில் தமிழம் சார்பில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வென்ற  மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயரிய ஊக்கத் தொகை முறையே தங்க பதக்கம் (ரூ.2 லட்சம்) வெள்ளி பதக்கம் (ரூ.1.5 லட்சம்), வெண்கல பதக்கம் (ரூ.1 லட்சம்) மொத்தம் ரூ.54 லட்சம் வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வீரர்கள், 24 வீராங்கனைகளுக்கு ரூ.78.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, வழங்கப்பட்டுள்ளது. அதில் 2 வீரர், 16 வீராங்கனை தங்கப்பதக்கமும், 17 வீரர், 4 வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கமும், 6 வீரர்கள், 5 வீராங்கனைகள் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த வீரர், வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் வகையில் காஞ்சி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை, காசோலையாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) நாராயணன், முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: