பொது இடங்களில் குப்பை எரித்தால் எப்ஐஆர்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுடெல்லி: திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பவர்கள் மீது எப்ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்கள், திறந்தவெளிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இந்த தீயால் மிகப்பெரும் தீ விபத்துக்கள் நடந்த சம்பவங்களும் எராளமாக உள்ளுன. இது, நாடு முழுவதும் ஒட்டு மொத்த பிரச்னையாக  இருந்து வருகிறது.   இந்நிலையில், ‘பீப்புள் சேரியோட்டர்’ என்ற அமைப்பின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘ நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் குப்பைகளை அவர்கள் வசிக்கும் வீடுகள் மட்டுமில்லாமல், பொது இடங்களிலும் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், மாசு அதிகரித்து காற்றின் தரம் குறைகிறது. இதேநிலை நீடித்தால் தலைநகர் டெல்லியில் உள்ள அபாயம்நாடு முழுவதும் ஏற்படும். பொதுமக்கள் மட்டுமில்லாமல் உள்ளாட்சி நிர்வாகங்களும் கூட குப்பைகளை திறந்தவெளியில் எரிக்கின்றன. இதுபோன்று ஏற்படும் காற்று மாசுவால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதனால் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி எரிப்பவர்கள மீது எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதை கட்டாயமாக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: