அதிமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி? மாவட்ட செயலாளருடன் விஜயகாந்த் நாளை அவசர ஆலோசனை

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார்.  நேற்று முன்தினம் தேனியில் பேட்டி அளித்த பிரேமலதா, “தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம்” என்று . அறிவித்தார். தனித்து போட்டியிட தயாராகி வருகிறார்கள் என்ற தகவலும் பரவியது. தமிழகத்தில் பாஜவை விட தேமுதிகவுக்கு மக்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளது.. எனவே, பாஜவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தேமுதிகவுக்கு கொடுக்கவில்லை என்ற ஆதங்கமும் தேமுதிகவினரிடையே இருந்து வருகிறது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பாஜவை விட அதிமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற ேகாரிக்கையும் தேமுதிகவிடம் இருந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோனை கூட்டம் 13ம் தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்தில் தேமுதிகவின் பலம் எவ்வாறு உள்ளது. தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பின்னர் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் விரைவில் தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி முறையான அறிவிப்பு வெளியிடவும் தேமுதிக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: