'தமிழகத்தின் அடுத்த முதல்வரை தே.ஜ.கூட்டணிதான் முடிவு செய்யும்': பா.ஜ.க மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம்

தஞ்சை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும் என்று பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், தமிழகத்தின் அடுத்த முதல்வர் பழனிசாமிதான் என்று அதிமுக முடிவு செய்யலாம் என குறிப்பிட்டார். ஆனால் பாஜகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிதான் முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார். கருப்பு முருகானந்தம் கருத்தால் பாஜக- அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: