கூகுள் நிறுவனத்தில் இருந்து பெண் விஞ்ஞானி டிஸ்மிஸ் சுந்தர் பிச்சை மன்னிப்பு

கலிபோர்னியா: உலகத்தை உள்ளங்கையில் அடக்கியுள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். தற்போது இந்த நிறுவனம், ‘ஏஐ’ என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு திட்ட ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில், முன்னணி விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் டிம்னிட் கெப்ரூ. செயற்கை நுண்ணறிவு துறையில் சிறந்த அறிஞரான இவர், கடந்த வாரம் திடீரென பணியில் இருந்து வெளியேறினார். இது, பெரு்ம சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனது நிறுவனத்தில் இருந்து டிம்னிட் கெப்ரூ திடீரென வெளியேறுவது, கூகுள் மீது பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு இருப்பதற்காக சுந்தர் பிச்சை மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பான கூகுள் ஊழியர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிம்னிட் கெப்ரூ வெளியேறுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் என்ன என்பது பற்றியும், அவருக்கு மேலும் மரியாதை அளிப்பதற்கான நடைமுறைகள் என்ன என்பது பற்றியும் கூகுள் மறுஆய்வு செய்கிறது, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் அல்லது ராஜினாமா செய்தார் என்று அழைக்கவில்லை. ஆனால், ஒரு மிக சிறந்த திறமை கொண்ட கருப்பின பெண் விஞ்ஞானி, கூகுளை மகிழ்ச்சியற்ற நிலையில் விட்டுவிட்டார் என்ற உண்மைக்கான பொறுப்பை நாங்கள் ஏற்க வேண்டும். இதற்காக மன்னிப்பு கோருகிறேன்,’ என கூறியுள்ளார். இதற்கு தனது டிவிட்டர் பதிவு மூலம் பதில் அளித்துள்ள கெப்ரூ, ‘சிஇஓ.வின் அறிக்கையில் எவ்வித பொறுப்பு கூறலும் இல்லை. அதில் எனக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை,’ என கூறியுள்ளார்.

Related Stories: