அரசிதழில் இடஒதுக்கீடு சட்டதிருத்தம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

மதுரை: தமிழ்வழி கல்வியில் படித்தோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘சட்டத்திருத்தம் அமலாக ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினரையும் பாராட்டுகிறோம்’’ என்றனர்.

Related Stories: