வாடிக்கையாளர் கடன்களுக்கான ஆறு மாத வட்டியை முழுமையாக ரத்து செய்தால் வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் : மத்திய அரசு

புதுடெல்லி: வாடிக்கையாளர் கடன்களுக்கான ஆறு மாத வட்டியை ஒட்டுமொத்தமாக் முழுமையாக தள்ளுபடி செய்யும் பட்சத்தில் வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.மின் மற்றும் சிறு குறு உற்பத்தியாளர்கள் நிவாரணம் கேட்டுள்ளதால் வட்டிக்கு வசூல் செய்தது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரையில் நிலுவையில் உள்ளது. இதில் நிவாரணம் பெற்றுக்கொண்ட பல்வேறு வழக்குகளை நீதிமன்றம் முடித்தும் வைத்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளுக்கும் ஊக்கச் சலுகை திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட, 27 துறைகளுக்கு அவசர கடன் உதவி திட்டத்தின் கீழ் உத்தரவாதமில்லா கடன் வழங்க மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதங்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் வரையிலான அனைத்து கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை ஏற்பதாக தெரிவிக்கப்பட்டு, திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதே நேரத்தில் வட்டியும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சில மனுதாரர்கள் தரப்பில் விசாரணையின் போது கோரிக்கை வைக்கப்படுகிறது. அதனை ஏற்க முடியாது. அதற்கான சாத்தியமும் கிடையாது. அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் வங்கிகளுக்கு சுமார் ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். அதேப்போன்று வங்கிகளின் சொத்து மதிப்பு 50 சதவீதம் வரையில் குறைந்து அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும். இது நாடு முழுவதிலும் உள்ள வங்களில் டெப்பாசிட் செய்துள்ள மூத்த குடிமக்கள் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட காரணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் வாதங்களாக முன்வைக்கப்பட உள்ளது.

Related Stories: