கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டம் ஓராண்டு தாமதமாகும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

பெங்களூரு: ‘மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் ஓராண்டு தாமதமாக செயல்படுத்தப்படும்’ என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யா திட்டத்தை இஸ்ரோ திட்டமிட்டது. இதன்படி திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோட்டமாக டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டது. இதில் ஒரு பகுதியாக ரோபோவை அனுப்பி வைக்க இருந்தது. இதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோவை அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.  

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ககன்யான் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக கடந்த ஜூன் மாதம் இஸ்ரோ தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொற்றின் தாக்கம் குறையாத காரணத்தினால் ககன்யான் திட்டம் 2022-ம் ஆண்டு இறுதியில்ட செயல்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், பிஎஸ்எல்வி அடுத்ததாக ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்துவதாக இருந்த சந்திரயான்-3 திட்டமும் ஒத்தி வைக்கப்படுகிறது. ஆனால் மீண்டும் விண்ணுக்கு அனுப்புவதற்கான அட்டவணையை நாங்கள் இன்னும் நிர்ணயிக்கவில்லை. தொடர்ந்து 2023-ம் ஆண்டு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்த வீனஸ் பணி உள்பட பல பணிகள் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Related Stories: