ஈரான் அணு விஞ்ஞானியை சேட்டிலைட் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது அம்பலம்

டெஹ்ரான்: ஈரானின் முக்கிய விஞ்ஞானியான மோசென் பக்ரிசடே கடந்த 27ம் தேதி காரில் சென்றபோது துப்பாக்கி மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அணு விஞ்ஞானி கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் கூறி வந்தது. இந்நிலையில் ஈரான் ராணுவ துணை கமாண்டர் அலி படாவி கூறுகையில், “13 சுற்றுக்கள் மோசென் முகத்தில் சுடப்பட்டுள்ளது. ஆனால் அவரது அருகில் ஒரு இன்ச் இடைவெளியில் அமர்ந்திருந்த அவரது மனைவி சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். செயற்கை கோள் மூலமாக இயக்கப்படும் துப்பாக்கியின் மூலமாக மோசென் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: