உடன்பாட்டை மீறி விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் முயற்சிக்கு விவசாயிகள் எதிர்ப்பு: கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம்: கோவையில் இருந்து பெங்களூரு வரை விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 15ம்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். இதுதொடர்பாக வருவாய்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் எதுவும் செய்யப்படாது என உடன்படிக்கை கையெழுத்தானது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர், பட்லூர் எளையாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள், வருவாய் துறையினருடன் வந்து விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி, விளைநிலங்களில் அளவீடு செய்யும் பணியினை மேற்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உடன்படிக்கையை மீறிய ெபட்ரோல் நிறுவனத்தின் செயலை கண்டித்து, அங்கு வயலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தியும், கால்நடைகளுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: